உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ராம்நாத் கோவிந்த் உத்தரவு

உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ராம்நாத் கோவிந்த் உத்தரவு

உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ராம்நாத் கோவிந்த் உத்தரவு
Published on

உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன என்ற குற்றசாட்டு அடிக்கடி இருந்து வந்தது. இதில் உச்சநீதிமன்றமும் அடங்கும். மொத்தம் உள்ள 31 நீதிபதிகளில் எப்போதுமே 25 அல்லது 26 நீதிபதிகள் மட்டுமே பணியில் இருந்து வந்தார்கள். 

சுமார் 6 லிருந்து 7 பணியிடங்கள் எப்பொழுதுமே காலியாக இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன. அந்த வகையில் உச்சநீதிமன்றத்தில் தற்போது வரை 4 பணியிடங்கள் காலியாக இருந்தது. ஆனால் மொத்தமுள்ள 31 பணியிடங்களும் தற்போது நிரப்பப்பட்டு விட்டன. இதற்கான அரசாணையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். 

சூரியகாந்த், அனிருத்தா போஸ், போபன்னா, காவி ஆகிய நான்கு பேரும் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏற்கனவே அனிருத்தா போஸ், போபன்னா ஆகியோரை உச்சநீதிமன்ற அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கே மத்திய அரசு திருப்பி அனுப்பி இருந்தது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆனால் உச்சநீதிமன்றம் எந்தவொரு பின்வாங்கலும் இல்லாமல் கண்டிப்பாக அவர்களை நியமித்தே ஆகவேண்டும் என மீண்டும் பரிந்துரை செய்தது. இதையடுத்து மத்திய அரசுக்கு வேறு ஏதும் வாய்ப்பு இல்லாததால் உச்சநீதிமன்றத்தின் கோப்பை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தது. தற்போது அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகளின் பதவி ஏற்பு நாளை அல்லது வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

காவி என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் நான்காவது முக்கியமான நீதிபதியாக இருந்து வருகிறார். சூரியகாந்த், ஹிமாச்சல பிரதேசத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அனிருத்தா போஸ் உள்ளார். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக போபன்னா உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com