மும்பையில் கட்டிடம் இடிந்து 10 பேர் பலி: 15 பேர் காயம்

மும்பையில் கட்டிடம் இடிந்து 10 பேர் பலி: 15 பேர் காயம்

மும்பையில் கட்டிடம் இடிந்து 10 பேர் பலி: 15 பேர் காயம்
Published on

மும்பையில் மழையால் பலமிழந்து 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர்  பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவந்தது. நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவு கொட்டிய மழையில் பலர் பலியாயினர். மழை வெள்ளம் வடிந்ததால் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள பெண்டி பஜார் பகுதியில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று மழையால் பலமிழந்து, இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. 

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 10 பேர்  பலியாயினர். அவர்கள் உடல் மீட்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com