பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் கட்டடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 12 வாகனங்களில் அங்கு விரைந்தனர். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.