பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது
அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில், டெல்லியில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை தமிழகத்தில் உருவாக்க முயன்றதாக தமிழகத்தில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை மற்றும் நாகையில் 4 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த இருவரும் கைதாகினர். அவர்கள் இருவரையும் ஜூலை 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில், டெல்லியில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாகை, சென்னையில் நடந்த சோதனை அடிப்படையில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரையும் விமானம் மூலம் சென்னை அழைத்து வர என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்களை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.