ஹைதராபாத் ஏர்போர்ட்டில் ஒரேநாளில் பிடிபட்ட 4.37 கிலோ தங்கம் - சிக்கியது எப்படி?

ஹைதராபாத் ஏர்போர்ட்டில் ஒரேநாளில் பிடிபட்ட 4.37 கிலோ தங்கம் - சிக்கியது எப்படி?
ஹைதராபாத் ஏர்போர்ட்டில் ஒரேநாளில் பிடிபட்ட 4.37 கிலோ தங்கம் - சிக்கியது எப்படி?

ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நபர்களிடமிருந்து 4.37 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முதலில் துபாயிலிருந்து வந்த மூன்று பெண்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள் மூவரும் பேஸ்ட் வடிவ தங்கம் மற்றும் 24 காரட் தங்கச் சங்கிலிகளை தங்கள் உள்ளாடைகளில் மறைத்து கடத்திவந்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.72 கோடி மதிப்புள்ள 3.28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அடுத்து குவைத்திலிருந்து வந்த இரண்டு ஆண் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடத்தப்பட்ட தங்கம் பிடிபிட்டது. தங்கள் பைகளில் மறைத்து வைத்திருந்த இரண்டு தங்கக்கட்டிகள், பட்டன்கள் மற்றும் சில நகைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மொத்த எடை 855 கிராம்.

மீண்டும் துபாயிலிருந்து வந்த மற்றொரு பெண் பயணி அதிகாரிகளிடம் பிடிபட்டார். ஹேர் பேண்ட் மற்றும் ஆடைகளின் வெவ்வேறு பகுதிகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 234.2 கிராம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். ரூ.4 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஒருநாள் கழித்தே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதற்கும் முந்தைய நாள் பேங்காக்கிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவர் 865.6 கிராம் தங்க பேஸ்ட்டை மறைத்து கடத்தி வந்தபோது பிடிபட்டார். அதன் மதிப்பு ரூ.46.05 லட்சம் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். தற்போது நாடுவிட்டு நாடு நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் மிருகங்களை விமானங்களில் கடத்திவருவதும் அதிகாரிகளிடம் பிடிபடுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com