மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு
Published on

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவிகிதத்திலிருந்து 21 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது என்று கூறினார்.

இதன் மூலம் 48 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர் என்ற அமைச்சர், இதனால் அரசுக்கு கூடுதலாக 14,595 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்தார். மேலும், நிதி சிக்கலில் உள்ள யெஸ் வங்கியை கட்டமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, யெஸ் வங்கியின் 49 விழுக்காடு பங்குகளை எஸ்.பி.ஐ. வங்கி வாங்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com