வேட்புமனுத் தாக்கல்
வேட்புமனுத் தாக்கல்முகநூல்

கர்நாடகா முதல் காஷ்மீர் வரை... இந்த மாநிலங்களில் எல்லாம் இன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்!

நாடாளுமன்றத் தேர்தலில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது

இந்தியாவில் மக்களவை தேர்தல் பரபரப்புகள் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி 12 மாநிலங்களுக்கு உட்பட்ட 94 தொகுதிகளில் மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இன்று தொடங்கி ஏப்ரல் 19 ஆம் தேதி வரை அத்தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. 3ஆம் கட்ட வாக்குப்பதிவு அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது.

வேட்புமனுத் தாக்கல்
உலகின் மிகப்பெரிய பசுமை எரிசக்தி பூங்கா.. குஜராத்தில் உருவாக்கிய அதானி குழுமம்!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதில் முதற்கட்ட தேர்தல், தமிழ்நாடு - புதுச்சேரியில் வரும் 19-ம் தேதி நடக்க உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com