உத்தரகாண்ட்: யோகா பயில வந்த அமெரிக்க பெண்ணிற்கு பாலியல் தொல்லை!

உத்தரகாண்ட்: யோகா பயில வந்த அமெரிக்க பெண்ணிற்கு பாலியல் தொல்லை!

உத்தரகாண்ட்: யோகா பயில வந்த அமெரிக்க பெண்ணிற்கு பாலியல் தொல்லை!
Published on

உத்தரகாண்ட்டில் யோகா பயில்வதற்காக வந்த அமெரிக்க பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ரிஷிகேஷ் நகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் யோகா கற்றுக் கொள்வதற்காக வந்துள்ளார். அந்தப் பெண்ணிடம் யோகா பயிற்சி தெரிந்த உள்ளூரைச் சேர்ந்த நபர் ஒருவர் நட்பாக பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி அந்த நபர், அமெரிக்க பெண் தங்கியிருந்த வீட்டு பால்கனி வழியாக பெண்ணின் அறைக்குள் நுழைந்து பாலியல் தொல்லை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்தப் பெண் ரிஷிகேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். 

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சம்பவத்திற்கு முன்னர் நட்பாக பேசி பல முறை அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால்  அப்பெண் வருவதற்கு தயக்கம் தெரிவித்துள்ளார். இதன்பிறகே அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் தந்தை வழக்கை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்க பெண் தெரிவித்துள்ளார்.

.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com