வேலையின்மை, கடனால் தொடரும் தற்கொலை: மத்திய அரசின் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

வேலையின்மை, கடனால் தொடரும் தற்கொலை: மத்திய அரசின் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்
வேலையின்மை, கடனால் தொடரும் தற்கொலை: மத்திய அரசின் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

கடந்த 2020-ஆம் ஆண்டு வேலையின்மையின் காரணமாக நாடு முழுவதும் 3,548 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின்படி கடந்த 2019-ஆம் ஆண்டு 2851 பேர் வேலையின்மையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவே 2018ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2,841 இருந்தது.

அதேபோல கடனை திரும்பச் செலுத்த முடியாததன் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு 4,970 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு 5908 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டு 5213 ஆக பதிவாகி உள்ளது.

மன ரீதியிலான பாதிப்புகளை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட மனநல திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாகவும், தற்கொலை தடுப்பு சேவைகள் தனியார் அமைப்புகள் மற்றும் மாநில அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com