காதலியின் ஆசை.. கார் முழுதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தம்.. காவல் துறையிடம் சிக்கிய நபர்!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் காதலியின் விருப்பத்திற்காக காரை வித்தியாசமாக அலங்கரித்துச் சென்ற இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தனது காதலியின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய வாலிபர் ஒருவர், தனது வெள்ளை நிற கார் முழுவதும் சுமார் 3,400 சிவப்பு நிற லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களால் அலங்கரித்து சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். நகரின் முக்கியச் சாலையில் இந்த கார் சென்றபோது, அப்பகுதியில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை பெருமளவில் திசைதிருப்பியது.
இதைக் கண்ட போக்குவரத்து காவல்துறையினர் காரை வழிமறித்தனர். மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு மாறாக வாகனத்தின் தோற்றத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட விதிகளின்படி, காவல்துறை அவருக்கு ரூ. 5,500 அபராதம் விதித்தது. மேலும், காரின் தோற்றத்தை மாற்றியதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த காவல் துறை, வாலிபரை வைத்தே காரில் இருந்த அனைத்து லிப்ஸ்டிக் குறிகளையும் துடைத்து அகற்றச் செய்தது.

