33 மணி நேரம் ஏரோப்பிளேன் மோடில் இருந்த மோடியின் செல்ஃபோன்

33 மணி நேரம் ஏரோப்பிளேன் மோடில் இருந்த மோடியின் செல்ஃபோன்

33 மணி நேரம் ஏரோப்பிளேன் மோடில் இருந்த மோடியின் செல்ஃபோன்
Published on

மிக வேகமான பன்னாட்டு பயணத்தை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பியிருக்கிறார் பிரதமர் மோடி. 

அமெரிக்கா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து என மோடியின் சுற்றுப்பயணம் 95 மணி நேரம். இதில் 33 மணி நேரத்தை அவர் ஏர் இந்தியா போயிங் விமானத்திலேயே கழித்திருக்கிறார். அதனால் 33 மணி நேரமும் அவரது செல்போன் ஏரோப்பிளேன் மூடிலேயே இருந்துள்ளது. 33 மணி நேரம் ஏரோபிளேனில் செலவழித்த அவர் அமெரிக்கா, போர்ச்சுகல், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் 33தான்.
எந்த நாட்டிற்குச் சென்று இறங்கினாலும் அங்கு போய்த் தூங்குவதை விட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதால் அவர் விமானப் பயண நேரத்தைத் தூங்கும் நேரமாக வைத்துக் கொண்டு பயணத்தைத் திட்டமிட்டார். நான்கு நாட்களில் இரு இரவுகளை விமானத்திலேயே தங்கி செலவிட்டிருக்கிறார் பிரதமர். போர்ச்சுகலிலும், நெதர்லாந்து நாட்டிலும் அவர் பகலிலேயே இருந்திருக்கிறார். 

அமெரிக்காவில் அவர் செலவிட்ட இரண்டு தினங்களில் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பு, வெள்ளை மாளிகை நிகழ்ச்சிகள் ஆகியவை உட்பட 17 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அதன்பிறகு நெதர்லாந்து சென்ற அவர் அங்கு 7 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் திட்டமிட்டபடி காலை 6:20 மணிக்கு டெல்லியை வந்தடைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com