\
பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுவாய் மதோப்புரில் இருந்து லால்கோட் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. துபி பகுதியில் உள்ள பாலத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. 

தகவல் அறிந்த மீட்பு படையினர் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com