உ.பி: ஒருமணி நேரத்தில் இருவேறு விபத்துகள் - 31 பேர் உயிரிழப்பு

உ.பி: ஒருமணி நேரத்தில் இருவேறு விபத்துகள் - 31 பேர் உயிரிழப்பு
உ.பி: ஒருமணி நேரத்தில் இருவேறு விபத்துகள் - 31 பேர் உயிரிழப்பு

வட மாநிலங்களில் இன்னும் பொதுமக்களை ஏற்றிச்செல்ல டிராக்டர்களை அதிகளவில் பயன்படுத்துகின்றது. இதனால், அடிக்கடி டிராக்டர்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம்  கான்பூர் அருகே ஃபதேபூரில் உள்ள சந்திரிகா தேவி கோயிலுக்கு நேற்று மாலை சுமார் 50 பேர் டிராக்டரில் பயணித்துச் சென்றுள்ளனர். அங்குள்ள கதம்பூர் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தொடர்ந்து டிராக்டர் முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளம் ஒன்றில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், தற்போது மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர். இது தவிர 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களை போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த கோர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ''விபத்துப் பகுதியில் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. தயவு செய்து டிராக்டர்களில் மக்களை ஏற்றிச் செல்லாதீர்கள். டிராக்டர்களை விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வட மாநிலங்களில் இன்னும் பொதுமக்களை ஏற்றிச்செல்ல டிராக்டர்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், அடிக்கடி டிராக்டர்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.

இதேபோல் கான்பூரில் நேற்றிரவு நடந்த மற்றொரு சம்பவத்தில், வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். கான்பூரில் நேற்று ஒருமணி நேரத்தில் நடந்த இந்த இருவேறு விபத்துகளில்  31 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதையும் படிக்க: ராஜஸ்தான் கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி - பின்னணி என்ன?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com