\
உத்தராகண்டில் வென்றால் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், 24 மணிநேர மின் விநியோகம்: ஆம்ஆத்மி

உத்தராகண்டில் வென்றால் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், 24 மணிநேர மின் விநியோகம்: ஆம்ஆத்மி

உத்தராகண்டில் வென்றால் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், 24 மணிநேர மின் விநியோகம்: ஆம்ஆத்மி
Published on: 

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தராகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 24 மணி நேர மின்சார விநியோகம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்திருக்கிறார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி கட்சி உத்தராகண்ட் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலத்தில் நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். மக்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 24 மணி நேர மின்சாரம் வழங்க சிறிது காலம் ஆகும், ஆனால் நாங்கள் அதை நிச்சயமாக செய்வோம், " என்று உறுதியளித்தார்.

ஏற்கனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதியளித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com