ஒரு கிமீ பரப்பளவில் நிலச்சரிவு: 50 பேர் சிக்கியதாக தகவல் : கேரளாவில் தொடரும் சோகம்

ஒரு கிமீ பரப்பளவில் நிலச்சரிவு: 50 பேர் சிக்கியதாக தகவல் : கேரளாவில் தொடரும் சோகம்
ஒரு கிமீ பரப்பளவில் நிலச்சரிவு: 50 பேர் சிக்கியதாக தகவல் : கேரளாவில் தொடரும் சோகம்

கேரளாவில் கவலப்பாரா என்னும் இடத்தில் 50க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரினால் ஏற்படும் நிலச்சரிவே கேரளாவை அதிகமாக அச்சுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கவலப்பாரா என்ற இடம் நிலச்சரிவில் புதைந்துவிட்டதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான இடம் நிலச்சரிவில் மூடப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடுமையான சூழல் காரணமாக கவலப்பாரா இடத்துக்கு செல்ல மீட்புப்படையினரும் திணறி வருகின்றனர். கவலப்பாராவில் சிக்கியுள்ளவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர் மழையால் மீட்புப்பணி பாதிக்கப்படுவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com