ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஜம்மு -காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர். 

ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com