பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்

பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்

பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 3 போலீசார் பணியிடை நீக்கம்
Published on

தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டதில், நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய ஷம்ஷாபாத் உதவி ஆய்வாளர் உட்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஷாத்நகரை சேர்ந்தவர் பிரியங்கா ரெட்டி. 26 வயதான இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி அந்தப் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியது. இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் என ஒரு டிரைவர், ஒரு கிளினர் மற்றும் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி முகமது பாஷா மற்றும் சிவா, நவீன், சென்னகேவலு ஆகியோர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அப்பெண் காணாமல் போனது குறித்து ஷம்ஷாபாத் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தும் முதல் த‌கவல் அறிக்கை பதிவு செய்ய தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது‌.

இதுகுறித்து சைபராபாத் காவல் ஆணை‌யர் விசாரணை மேற்கொண்ட ‌நிலையில் உதவி ஆய்வாளர் ரவிகு‌மார், தலைமைக் காவலர்கள் வேணு கோபால்‌ மற்றும் சத்யநாராயண கவுடா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com