குளிர்பானத்தில் போதைபொருளை கலந்து கூட்டு பாலியல் வன்கொடுமை - காவலர் உட்பட 3 பேர் கைது

குளிர்பானத்தில் போதைபொருளை கலந்து கூட்டு பாலியல் வன்கொடுமை - காவலர் உட்பட 3 பேர் கைது

குளிர்பானத்தில் போதைபொருளை கலந்து கூட்டு பாலியல் வன்கொடுமை - காவலர் உட்பட 3 பேர் கைது
Published on

32 வயது பெண்ணுக்கு போதைப்பொருளை கொடுத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ராஜஸ்தான் போலீஸ் உட்பட 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த 32 வயது பெண்ணின் நண்பர் அஜய்(39). இவர் தனது நண்பர்களான போலீஸ் கான்ஸ்டபிள் தாரா சந்த் (34) மற்றும் நரேஷ்(38) ஆகியோருடன் வடமேற்கு டெல்லியில் ஆதர்ஷ் நகரிலுள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்துள்ளார். அப்போது அஜய் தனது தோழியை அங்கு அழைத்துள்ளார். அங்கு அவருக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர். அந்த குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து மயங்கியவுடன் அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததுடன் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் ஞாயிற்றுக்கிழமை ஆதர்ஷ் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷ்னர் உஷா ரங்னானி கூறுகையில், ’’ஞாயிற்றுக்கிழமை ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகாரளித்தார். அதில் தனது நண்பர் அஜித் என்பவர் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாகவும், அங்கு அவருடைய நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்துகொண்டு தனதுக்கு குளிர்பானம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். குளிர்பானத்தை குடித்தபிறகு தான் சுயநினைவை இழந்ததாகவும், அதன்பிறகு அவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது புகாரின்பேரில் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் குற்றம் உறுதியானது. அதன்பேரில் காவலர் உட்பட மூன்றுபேரின் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய போதைப்பொருளை ஏற்றுதல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்றுபேரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com