இறுதி சடங்கிற்கு சென்ற மூவர் கடத்தல்காரர்கள் என நினைத்து கொலை: வதந்தியால் நேர்ந்த கொடூரம்

இறுதி சடங்கிற்கு சென்ற மூவர் கடத்தல்காரர்கள் என நினைத்து கொலை: வதந்தியால் நேர்ந்த கொடூரம்
இறுதி சடங்கிற்கு சென்ற மூவர் கடத்தல்காரர்கள் என நினைத்து கொலை: வதந்தியால் நேர்ந்த கொடூரம்
மகாராஷ்டிர மாநிலத்துள்ள ஒரு கிராமத்தில் பரவிய வதந்தியை நம்பி மூன்று பேரை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கட்சின்சாலே (Gadchinchale). இது மும்பையிலிருந்தது 125  கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று நடைபெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி, அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் மற்றும் உடல் உறுப்புக்களைப் பறிப்பதாக ஒரு வதந்தி திடீரென்று பரவியுள்ளது. ஆகவே அதைக் கேட்ட மக்கள் அச்சத்திலிருந்துள்ளனர். இந்த வதந்திக்கு இடையில் ஊரில் திரிந்த 70 வயது முதியவரைத் தவறாகப் புரிந்து கொண்ட மக்கள் அவரைத் தாக்கியுள்ளனர். அந்தத் தாக்குதலில் முதியவர் கொல்லப்பட்டுள்ளார்.   
 
 
இந்தக் கிராமவாசிகள் அனைவரும் சேர்ந்து கட்டை மட்டும் கற்களைக் கொண்டே அந்த முதியவரை அடித்துக் கொன்றுள்ளனர். இதனை அறிந்து வந்த காவல்துறையினர் அந்தக் கும்பலை விரட்டி அடித்து முதியவரின் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த முதியவருடன் மேலும் இருவர் இருந்துள்ளனர். அவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் விசாரணையின் இந்த முதியவரும் அவருடன் இருந்த மற்றொருவரும் சாதுக்கள் எனத் தெரியவந்துள்ளது. மூன்றாம் நபர் இவர்கள் பயணித்த வாகனத்தின் ஓட்டுநர் எனத் தெரிந்துள்ளது.
 
இந்த முதியவர் உட்பட அந்த மூன்று நபர்களும் தக்கப்படும் போது சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், “ஏய்.. அவரை அடிங்கடா” எனக் கூச்சலிடுவது பதிவாகியுள்ளது. இதில் பலர் ஆயுதம் வைத்து அவர்களைத் தாக்கியதும் பதிவாகியுள்ளது. அந்தத் தாக்குதலின் போது அவர்கள் உயிர்ப்பிச்சைக் கேட்டுக் கெஞ்சுகிறார்கள். ஆனால் மூவரும் துரதிருஷ்டவசமாகக் கொல்லப்பட்டனர்.
 
 
இந்தச் சம்பவம் குறித்து  மாவட்ட ஆட்சியர் கைலாஷ் ஷிண்டே , “அதிகாரிகள்  அந்த மூவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் அதற்குள் இறந்துவிட்டனர். நாங்கள் மேலும்  விசாரித்து வருகிறோம்.  110 பேரைக் கைது செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
 
 
கொல்லப்பட்ட மூன்று பேர் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன.  சுஷில் கிரி மகாராஜ் (35), நிலேஷ் தெல்கனே (35), சிக்கனே மகாராஜ் கல்பவ்ரிஷ்கிரி (70) ஆகிய மூவர்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாவதற்காகச் சூரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள காசா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com