\
காஷ்மீரில் பனிச்சரிவு: ராணுவ வீரர்கள் மாயம்!

காஷ்மீரில் பனிச்சரிவு: ராணுவ வீரர்கள் மாயம்!

காஷ்மீரில் பனிச்சரிவு: ராணுவ வீரர்கள் மாயம்!
Published on

காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பனிச்சரிவால் மாயமான மூன்று ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதனால் திரும்பிய இடமெல்லாம் பனி மூடி உள்ளது. மரங்கள், தாவரங்கள், கட்டடங்கள் என அனைத்திலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் பந்திப்போரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே கடும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் பனிக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் பனிசரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாயினர். ஏப்ரல் மாதம் 3 வீரர்கள் பனியில் புதைந்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com