பூரி ஜெகன்நாதர் கோயில்
பூரி ஜெகன்நாதர் கோயில்fb

பூரி ஜெகன்நாதர் கோயில்|அதிகரித்த கூட்ட நெரிசல் 3 பேர் பலி, 50 பேர் காயம்!

பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி, 50 பேர் காயம் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
Published on

ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இங்கு 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் பிரபலமானது.

பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் நடைபெறும். இந்தநிலையில், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது இப்பணிகள் நிறைவடைந்தநிலையில், நேற்றைய தினம் (27.6.2025) ரத யாத்திரைக்கான பூஜைகள் நடைப்பெற்றது.

இதில், கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்திருந்தனர். பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்க அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கியதால் காயமடைந்தும், வாந்தி - மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டும் 625 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ரதவோட்டம் நிறுத்தப்பட்டது இதன்பின்னர், மீண்டும் யாத்திரை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் பக்​தர்​கள் கூட்​டம் அதி​கம் இருந்த பகு​தி​யில் ரதயாத்​திரை​யில் பங்​கேற்​கும் இரண்டு வாக​னங்​கள் உள்ளே நுழைந்​தன. அப்​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் காயம் அடைந்​தனர்.

அவர்களை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 12 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பூரி ஜெகன்நாதர் கோயில்
கொல்கத்தா மாணவி பாலியல் வழக்கு | ’இப்படி பேசலாமா..’ மோதிக்கொண்ட திரிணாமுல் காங். எம்பிக்கள்!

இச்​சம்​பவத்​துக்கு வருத்​தம் தெரி​வித்த ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி, உயி​ரிழந்த பக்தர்களின் குடும்​பத்​துக்கு ரூ.25 லட்​சம் நிதி​யுதவி அறி​வித்​தார். பக்​தர்​களின் பாது​காப்​பில் அலட்​சி​ய​மாக இருந்த புரி காவல் துணை ஆணை​யர் விஷ்ணு சரண் பாதி மற்​றும் கமாண்​டென்ட் அஜய் பதி ஆகியோரை சஸ்​பெண்ட் செய்​ய​வும், மாவட்ட ஆட்சியர் சித்​தரர்த் ஸ்வைன், எஸ்​.பி. பினிட் அகர்​வால் ஆகியோரை பணி​யிட மாற்​றம் செய்​ய​வும் முதல்​வர் மோகன் சரண் உத்​தர​விட்​டார். பாது​காப்பு குறை​பாடு​களுக்கு காரண​மானவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com