\
Bank service
Bank serviceReuters

3 நாள் Bank Strike.. ATM-இல் முக்கிய சலுகை.. Note பண்ணுங்க மக்களே!

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தத்தால் சேவைகள் பாதிக்கப்படலாம். இதனால் வரும் திங்கள் முதல் புதன் வரை ATM பணம் எடுப்பதற்கான கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்.
Published on: 

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ள 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை ATM மூலம் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என பொதுத்துறை வங்கிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

வங்கி ஊழியர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்கள் மீதான பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை என்பதால், வேலைநிறுத்தத்துடன் சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ATM
ATMReuters

வேலைநிறுத்தம் நடைபெறும் 3 நாட்களிலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் ATM சேவையைப் பயன்படுத்தும்போது வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன.

பொதுவாக, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி ATM-இல் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். பிற வங்கிகளின் ATM-களில் ஒரு மாதத்திற்கு 3 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இந்த இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையைத் தாண்டி பணம் எடுத்தால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம்.

ATM
ATMReuters

ஆனால், வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் காலத்தில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால் வாடிக்கையாளர்கள், இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையைத் தாண்டி ATM மூலம் பணம் எடுத்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com