”கலவரத்தை தூண்டும் வகையில் யாரும் பேச வேண்டாம்” - கேரளாவில் வெடித்தது "டிபன் பாக்ஸ்" வெடிகுண்டுதான்!

கேரள மாநிலம் கொச்சி எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரி பகுதியில் கிறித்துவ அமைப்பு கூட்டரங்கு ஒன்றில் 3 முறை தொடர் குண்டு வெடிப்பானது நடைப்பெற்றது. இதற்கு பலர் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது 1 பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொச்சி தீ விபத்து
கொச்சி தீ விபத்துபுதிய தலைமுறை

கேரளாவில் குண்டுவெடிப்பு - நடந்தது


கேரள மாநிலம் கொச்சி எர்ணாகுளம் களமச்சேரி பகுதியில் கிறித்துவ அமைப்பு கூட்டரங்கு ஒன்று தொடர்ந்து 3 வது நாளாக நடைபெற்று வந்தது. இக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் என்று அனைவரும் பங்கேற்று பிராத்தனை செய்து வந்தனர்.

கொச்சி தீ விபத்து
கொச்சி தீ விபத்துபுதிய தலைமுறை

இந்நிலையில் இன்று காலை மக்கள் அதிகமாக பிராத்தனை செய்யும் பகுதியில் 3 முறை தொடர் குண்டு வெடிப்பானது நடைப்பெற்றது.

ஆனால் என்ன வெடித்தது? என்று தற்போது ஆய்வானது மேற்கொள்ளபட்டு வருகிறது. திடீரென ஏற்பட்ட பயங்கர சப்தத்திலும் அதனால் ஏற்பட்ட தீ விபத்தினாலும் அருகில் இருந்த பொருள்கள் அனைத்து பற்றி எரிய ஆரம்பித்தது.

இதற்கு பலர் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது 1 பெண் இத்தீவிபத்திற்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அளித்த பேட்டியில், ”காயமடைந்த 35க்கும் மேற்பட்டோரில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நடைபெற்றது பயங்கரவாத தாக்குதலா? என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெரியவரும் ” என்று தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்pt web

மேலும் குண்டுவெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டு அப்பகுதியில் தீவிரமாக தீயணைப்பு துறையினரால் மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து கேரள காவல்துறையானது தீவிர விசாரணையை நடத்தி வரும் நிலையில் இதன் எதிரொலியாக கேரளா முழுவதும் கண்காணிப்பானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் களமச்சேரி குண்டுவெடிப்பு தொடர்பாக கேரள முதலைச்சருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

இந்நிலையில், குண்டு வெடிப்பு பயங்கரவாத செயலா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக பயங்கரவாத தடுப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு படை, தேசிய புலனாய்வு முகமை குழுக்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, NSG, NIA குழுக்கள் கேரளா விரைந்து இருக்கிறது.

"டிபன் பாக்ஸ்" வெடிகுண்டு

விசாரணைக்கு சிறப்பு படையை அமைத்தது கேரளா போலீஸ். ஆரம்ப கட்ட விசாரணையில் "டிபன் பாக்ஸ்" வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கேரளாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் காணொளி மூலம் பேசியதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல்கள் கூறுகின்றன. இதை காரணமாக கொண்டு கலவரத்தை உண்டாக்கும் வகையில் யாரும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என கேரளா போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேரளா போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குண்டு வெடித்த இடத்தில் கிட்டத்தட்ட 2000 நபர்கள் வழிபாட்டுக்காக கூடியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com