ஜம்மு - காஷ்மீருக்கு தனி பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றத்தில் சூடு பிடிக்கும் விவாதம்

ஜம்மு - காஷ்மீருக்கு தனி பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றத்தில் சூடு பிடிக்கும் விவாதம்
ஜம்மு - காஷ்மீருக்கு தனி பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றத்தில் சூடு பிடிக்கும் விவாதம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடிய நிலையில், மக்களவையில் ஜம்மு காஷ்மீருக்கான தனி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரு அமர்வுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் அமர்வு கூடிய நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வுக்காக மக்களவையும், மாநிலங்களவையும் கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், மக்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான தனி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மாநிலங்களவையை தொடங்கி வைத்து பேசிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். இந்திய மாணவர்களை மட்டுமின்றி, அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களையும் பத்திரமாக மீட்டது மிகுந்த பாராட்டுக்குரியது என்றும் கூறினார். பல்வேறு துறைகளில் மானிய கோரிக்கைகள் மீது அந்தந்த துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்ந்து 30 நாட்கள் வரை விவாதம் நடத்தியிருப்பதும் ஆரோக்கியமான நிகழ்வு என புகழ்ந்துள்ளார். மாநிலங்களவையில் எட்டு நாடாளுமன்ற நிலைக்குழு 21 முறை கூடி 73 மணி நேரத்திற்கு மேலாக மானிய கோரிக்கைகளை விவாதித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறினார்.


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com