2ஜி முறைகேடு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு

2ஜி முறைகேடு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு
2ஜி முறைகேடு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு தேதி வரும் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார். தீர்ப்பு எழுதும் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

சிபிஐ தொடர்ந்த, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. தற்போது தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தகுதியற்ற நிறுவனங்களுக்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றம் சுமத்தியிருந்தது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 22 ஆயிரம் கோடி‌ ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில், 6 ஆண்டுகளாக நடந்த விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com