குழந்தை திருமணம் செய்து வன்கொடுமை... 12 வயது சிறுமி கருவுற்றதால் வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்!

மகாராஷ்ராவில் 12 வயது நிரம்பிய சிறுமியை சட்டவிரோத குழந்தை திருமணம் செய்து பல முறை அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார் ஒரு இளைஞர். அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைமுகநூல்

மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தினை சேர்ந்த 12 வயது சிறுமியொருவரை, அதே மாவட்டத்தினை சேர்ந்த 29 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக குழந்தை திருமணம் செய்துள்ளார்.

இதன்பிறகு அச்சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதிக்கு மகாஷாராஷ்ரா மாநிலம், பன்வேலை நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) மருத்துவ ஆய்வு நடத்துவதற்காக சிறுமியின் மாவட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமி 4 மாதங்கள் கருவுற்று இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அம்மருத்துவர் இதுகுறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
அடங்கா காளைகளை அடக்கும் காளையர் ; தச்சங்குறிச்சியில் மதநல்லிணக்க ஜல்லிக்கட்டு!

தகவல் அறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியதன் அடிப்படையில், சிறுமியின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அதற்கு காரணமாக இருந்த 29 வயது நிரம்பிய இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com