மின்னணு கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக 29 வழக்குகள் பதிவு - மத்திய அரசு

மின்னணு கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக 29 வழக்குகள் பதிவு - மத்திய அரசு
மின்னணு கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக 29 வழக்குகள் பதிவு - மத்திய அரசு

2019 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மின்னணு கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக 29 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில்  தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி டி.என்.பிரதாபன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு அளித்த புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் தலா 11 சட்டவிரோத மின்னணுக் கழிவுகள் கண்டறிதல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தென் மாநிலமான தமிழ்நாட்டில் 2020-2021-ல் ஒன்பது வழக்குகளும், 2021-2022 இல் பிப்ரவரி வரை இரண்டு வழக்குகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா 2019-2020 இல் மூன்று வழக்குகளையும், 2020-2021 இல் ஒரு வழக்கையும், 2021-2022 இல் ஏழு வழக்குகளையும் பதிவு செய்துள்ளது.



உத்தரப்பிரதேசத்தில் 2019-2020 இல் ஒரு வழக்கு மற்றும் 2021-2022 இல் ஒரு வழக்கு பதியப்பட்டது. குஜராத்தில் 2019-2020ல் இரண்டும், 2021-2022ல் ஒன்று என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 2020-2021 இல் இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில் இது தொடர்பான வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, “மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி)யின் கீழ் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக மின்னணுக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க தொடர்ந்து விழிப்புடன் இருப்பதுடன், இத்தகைய மீறல்கள் கவனிக்கப்படும் போதெல்லாம் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தும் வருகிறது" என தெரிவித்தார்

 

நாட்டில் மின்னணு கழிவுகளை மேலாண்மை செய்வது தொடர்பான  மின் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படி வழங்கப்பட்ட  மின்னணு உபகரணங்கள் (EEE) நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) கொள்கையின் கீழ், மின்னணு கழிவுகளை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் அகற்றும் பொறுப்பு தொடர்புடைய மின் உற்பத்தியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. EPR விதிகளின் கீழ், EEE உற்பத்தியாளர்களுக்கு வருடாந்திர மின் கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com