காஷ்மீரில் நிலவும் பதற்றம்: 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
காஷ்மீருக்கு கூடுதலாக 28 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதலான பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு அனுப்பப் படுவது குறித்து மத்திய அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஸ்ரீநகரின் முக்கிய நுழைவுப் பகுதிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். மேலும் காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை வழக்கத்தை விட 10 நாட்களுக்கு முன்பே தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்ற செயல்களால் ஸ்ரீநகர் பகுதியில் ஒரு வித பதற்றமடைந்துள்ளனர். வீடுகளுக்கு தேனையான பொருட்களை அவர்கள் வாங்கி இருப்பு வைக்கவும் தொடங்கியுள்ளனர். காஷ்மீரில் கடந்த வாரம்தான் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டிருந்தனர். காஷ்மீருக்கு தரப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொள்ள உள்ளது என்றும் அப்போது பெரும் வன்முறை வெடிக்கலாம் என்பதால் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதை மத்திய அரசு மறுத்திருந்தது