இந்தியாவில் எத்தனை போலி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன தெரியுமா?

இந்தியாவில் எத்தனை போலி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன தெரியுமா?

இந்தியாவில் எத்தனை போலி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன தெரியுமா?
Published on

போலி பொறியியல் கல்லூரிகள் குறித்து அதிமுக எம்.பி நாகராஜன், பாஜக எம்.பிக்கள் லஷ்மண் கிலுவா மற்றும் ராமதேவி ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் பதில் அளித்தார். அப்போது, நாட்டில் மொத்தம் 277 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளதாக சத்யபால் சிங் தெரிவித்தார். 

அவர் அளித்த தகவலின்படி, தலைநகர் டெல்லியில் தான் அதிகபட்சம் 66 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதற்கடுத்த இடங்களை தெலுங்கானா(35), மேற்குவங்காளம் (27) மாநிலங்கள் பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.

அதேபோல், யுஜிசி இணையதளத்தில் 24 போலி பல்கலைக் கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதையும் சத்யபால் சிங் குறிப்பிட்டார். போலி பல்கலைக் கழகங்களிலும் டெல்லி டாப்பில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் 9 போலி பல்கலைக் கழகங்களும், டெல்லியில் 7 பல்கலைக் கழகங்களும் உள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com