மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற ஆந்திர மாணவி - பிரேசில் இளைஞர் கத்தியால் குத்தியதில் நடந்த சோகம்!

இங்கிலாந்தில் மேல்படிப்புக்கு சென்ற ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kontham Tejaswini and her parent
Kontham Tejaswini and her parentTwitter

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயதான கோந்தம் தேஜஷ்வினி ரெட்டி என்ற மாணவி, மேல்படிப்புக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்த நிலையில், பிரேசிலைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் நேற்று காலை கத்தியால் குத்தியதில் மாணவி தேஜஷ்வினி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Neeld Crescent, Wembley
Neeld Crescent, Wembley

வெம்பிலேயில் தேஜஷ்வினி இருந்த அறையில் அவருடன் தங்கியிருந்த மற்றொரு மாணவியான அகிலா (28) கத்திக் குத்து காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவான சமையலறையை பகிர்ந்து கொள்ளும் பிளாட்டில் தேஜஷ்வினி இருந்தநிலையில், அதன் மற்றொரு பகுதியில் இருந்தவர் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட 23 வயது பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தேஜஸ்வினி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை பார்க்க ஹைதராபாத் இங்கிலாந்திலிருந்து வந்து சென்றுள்ளார்.

Kontham Tejaswini
Kontham Tejaswini

விரைவில் படிப்பை முடித்துவிட்டு தேஜஸ்வினி திரும்பிவந்ததும், அவருக்கு திருமணம் செய்துவைக்க, அவரது பெற்றோர் எண்ணியிருந்த நிலையில், இந்த சோக செய்திதான் அவர்களை வந்தடைந்துள்ளது. மாணவியை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com