முகமது ஷமி உட்பட 26 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு...

பேட்மின்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு மேஜர் தயாந்த் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி மற்றும் முகமது ஷமி உள்ளிட்ட 26 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி, வில்வித்தை வீரர்கள் ஓஜஸ் பிரவீன், அதிதி கோபி சந்த் சுவாமி, தடகள வீரர்கள் முரளி ஸ்ரீ சங்கர், பருல் சவுத்ரி ஆகியோருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Vaishali R
Vaishali RTwitter

குத்துசண்டை பிரிவில் முகமது ஹசாமுதீன், செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆகியோரும் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குதிரையேற்ற பிரிவில் அனுஷ் அகர்வாலா, திவ்யகிருதி சிங், கோல்ப் பிரிவில் திக்சா தாகரும் தேர்வாகி உள்ளனர். மொத்தம் 26 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்மின்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டிக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லலித் குமார், ஆர்.பி.ரமேஷ், மகாவீர் பிரசாத் சைனி, ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சரியார் விருது வழங்கப்பட உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com