பாலியல் வன்கொடுமை வழக்கில் Ex எம்.பி-க்கு சாகும் வரை சிறை., எஸ்.ஐ.டி குழுவிற்கு 25 லட்சம் சன்மானம்.!
கர்நாடக மாநிலத்தில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா (35). இவர், பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணவிற்கு எதிராக நான்கு பெண்கள் பாலியல் பலாத்கார புகார் அளித்தனர்.
இதையடுத்து, இந்த நான்கு வழக்குகளையும் கூடுதல் டிஜிபி பி.கே சிங் தலைமையில் அமைக்கப்பட்ட எஸ்.ஐ.டி குழு விசாரித்து வருகிறது. இதில், இரண்டாவது பலாத்கார வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு சாகும்வரை சிறை தண்டனையை வழங்கி கடந்த, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
பிரஜ்வல் ரேவண்ணவிற்கு தண்டனை கிடைத்த வழக்கில் தடயங்களை சேகரிக்க நிறைய சிரமம் அனுபவித்ததாக எஸ்.ஐ.டி குழுவினர் கூறியிருந்தனர். இந்த நிலையில் எஸ்.ஐ.டி குழுவிற்கு 25 லட்ச ரூபாய் ரொக்க பரிசாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதில், டி.ஜி.பி ரேங்க் அதிகாரிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய், ஐ.ஜி.பி அதிகாரிகளுக்கு தலா 8,000 ரூபாய், ஏ.சி.பி மற்றும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தலா 5,000 ரூபாய் கிடைக்கும்.

