\
மணிப்பூர்
மணிப்பூர்முகநூல்

மணிப்பூரில் மாறா வன்முறை.. 258 பேர் உயிரிழப்பு!

மணிப்பூர் வன்முறையில் இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
Published on

மணிப்பூர் மாநில பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் நிலவி வரும் வன்முறை, போராட்டங்களை கட்டுப்படுத்த மேலும் 90 பட்டாலியன் மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டதாக தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருடப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர்
மணிப்பூர் வன்முறை குறித்த பதிவுக்கு கட்டுப்பாடு - FB-க்கு எதிராக கொந்தளித்த 13வயது காலநிலை ஆர்வலர்!

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி பழங்குடியினர் இடையே வன்முறை வெடித்தது. தற்போது வரை மாநிலத்தில் ஆங்காங்கே இரண்டு குழுவினரும் அவ்வப்போது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com