ஆசிரியருக்கு ரூ.1 கோடியை வென்று தந்த '2-ம் உலகப் போர்' கேள்வி -  'க்ரோர்பதி' சுவாரசியம்

ஆசிரியருக்கு ரூ.1 கோடியை வென்று தந்த '2-ம் உலகப் போர்' கேள்வி - 'க்ரோர்பதி' சுவாரசியம்

ஆசிரியருக்கு ரூ.1 கோடியை வென்று தந்த '2-ம் உலகப் போர்' கேள்வி - 'க்ரோர்பதி' சுவாரசியம்

அமிதாப் பச்சனின் பிரபலமான டிவி ஷோ 'கௌன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்றதன் மூலம் ஓவர் நைட்டில் வைரல் ஸ்டார் ஆகி இருக்கிறார் 25 வயது ஆசிரியர் ஒருவர்.

பாலிவுட்டின் 'பிக் பி' அமிதாப் பச்சனின் பிரபலமான டிவி ஷோ 'கௌன் பனேகா க்ரோர்பதி'. நம்ம ஊரில் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்பதன் இந்தி வெர்ஷன். தற்போது இந்த நிகழ்ச்சி 13-வது சீசனை எட்டியிருக்கிறது. இதில் முதல் கோடீஸ்வரராக ஆக்ராவைச் சேர்ந்த 25 வயது ஆசிரியர் ஹிமானி பண்டேலா என்பவர் ரூ.1 கோடி வென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் சோனி டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ரூ.1 கோடிக்கான கேள்விக்கு சரியாக பதில் சொல்லி வென்ற பிறகு, அவர் ரூ.7 கோடி கேள்விக்கு விளையாடியானார்.

ஆனால், அதில் ஹிமானிக்கு பதில் சரியாக தெரியததால் கடைசியில் ரூ.1 கோடியுடன் வெளியேறுவதாக கூறி போட்டியை விட்டு வெளியேறினார். ரூ.1 கோடிக்கான கேள்வியாக அமிதாப் கேட்டது, இரண்டாம் உலகப் போரின்போது பிரான்சில் பிரிட்டனின் உளவாளியாக பணியாற்ற நூர் இனாயத் கான் பயன்படுத்திய மாற்றுப்பெயர் எது என்பது. இதற்கு வேரா அட்கின்ஸ், கிறிஸ்டினா ஸ்கார்பெக், ஜூலியன் ஐஸ்னர் மற்றும் ஜீன்-மேரி ரெனியர் என நான்கு சாய்ஸ்கள் கொடுக்கப்பட, இதில் சரியான விடையான ஜீன்-மேரி ரெனியர் என்பதை தேர்ந்தெடுத்து பரிசுத்தொகையை வென்றார்.

என்றாலும், 7 கோடி ரூபாய்க்கான கேள்வியாக பண்டேலாவிடம் அமிதாப், ``டாக்டர் அம்பேத்கர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் எந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, 1923-ஆம் ஆண்டு டாக்டரேட் பட்டம் பெற்றார்?" என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்காக The Want And Means Of India, The Problem Of The Rupee, National Dividend Of India, The Law And Lawyers என்ற ஆய்வுத் தலைப்புகள் சாய்ஸ் ஆக கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு விடை தெரியாததால் போட்டியில் இருந்து வெளியேறுவதாக ஹிமானி பண்டேலா ஒப்புக்கொண்டார்.

எனினும், அமிதாப் பண்டேலாவிடம் இந்தக் கேள்விக்கு ஒரு பதிலை தேர்ந்தெடுக்க சொல்ல, இறுதியாக National Dividend Of India என்ற விடையை தேர்ந்தெடுத்தார். ஆனால், இது தவறான விடையாக அமைந்தது. அந்தக் கேள்விக்கான சரியான விடை The Problem Of The Rupee என்பதுதான். இந்த ஆய்வுத் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்துதான் 1923ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார் பாபாசாகேப் அம்பேத்கர். இந்த ஆய்வில் அம்பேத்கர் பரிந்துரைத்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்திய ரிசர்வ் வங்கியை உருவாக்கியது ஹில்டன் யங் கமிஷன் என்பது வரலாறு.

இதனிடையே, ரூ.1 கோடி வென்ற ஹிமானி பண்டேலாவாலிடம், இந்தப் பணத்தை என்னச் செய்ய போகிறார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பண்டேலா, ``மாற்றுத் திறனாளி குழந்தைகளும், மற்ற குழந்தைகளும் கல்வி கற்கும் வகையில் பல்கலைக்கழகம் ஒன்று கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்கான முன்னெடுப்பை செய்து மாணவர்களை UPSC, CPCS முதலான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய இருக்கிறேன். மேலும் கொரோனா காரணமாக நலிவடைந்த தனது தந்தையின் தொழிலை மேம்படுத்த இந்த பணத்தை பயன்படுத்துவேன்" என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com