\
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
Published on

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பலருக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுச்சேரியில் நேற்று ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com