ஆந்திரா: நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

ஆந்திரா: நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
ஆந்திரா: நடிகை ரோஜா உட்பட 25 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

ஆந்திராவில் நடிகை ரோஜா உட்பட 25 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது.

ஆந்திராவில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஜெகன்மோகன் அப்போதே அறிவித்து இருந்தார்.இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த ஓராண்டாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.இந்நிலையில் 24 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், இவர்களில் 10 பேர் உள்பட 25 அமைச்சர்கள் இன்று காலை 11.31 மணியளவில் முறைப்படி பதவியேற்க உள்ளனர். தமிழக எல்லையை ஒட்டியுள்ள நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லையென அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், புதிய அமைச்சர்கள் பட்டியலில் ரோஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த புதிய அமைச்சரவை பட்டியலில் வாய்ப்பு கிடைக்காத சில எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com