டெல்லியில் நேதாஜிக்கு 25 அடி உயர பிரமாண்ட சிலை

டெல்லியில் நேதாஜிக்கு 25 அடி உயர பிரமாண்ட சிலை

டெல்லியில் நேதாஜிக்கு 25 அடி உயர பிரமாண்ட சிலை
Published on

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் அந்த இடத்தில் நேதாஜியின் கிரானைட் சிலை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட சிலையை, வடிவமைக்கும் பொறுப்பு தேசிய நவீன கலைகள் அருங்காட்சியகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேதாஜியின் 125ஆவது ஆண்டு பிறந்த தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அவரது சிலை அமைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க மத்திய அரசுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com