குழந்தை
குழந்தைஎக்ஸ் தளம்

பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை பெற்றோரால் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை.. அசாமில் அதிர்ச்சி சம்பவம்

அசாமில் பிறந்து 25 நாட்களே பெண் குழந்தை ஒன்று, தன் பெற்றோராலேயே ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

அசாமின் தேமாஜி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புத்திமான் போரா. இவரது மனைவி சபிதா போரா. நிறைமாத கர்ப்பிணியான சபிதாவிற்கு, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில், பிறந்து 25 நாட்களே ஆன அந்தப் பெண் குழந்தையை, பெற்றோர் இருவரும் ரூ.30 ஆயிரத்திற்கு விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தைகள் நலக் குழுவின் (CWC) தலையீட்டின் பேரில், நேற்று மருத்துவர் ஒருவரின் வீட்டிலிருந்து அக்குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தைபுதிய தலைமுறை

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட CWC தலைவர் ரூபாலி டெகா போர்கோஹைன், “புத்திமான் போரா ஒரு தினசரி கூலித் தொழிலாளி. நிரந்தர வருமானமில்லை. இதனால் அவர்கள் பொருளாதாரரீதியாக கஷ்டப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிறந்த குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர். அதிலும் குழந்தை பிறந்தவுடன் அங்கேயே விற்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அந்தக் குழந்தையை, பெகு சோஹோரியா என்பவர்தான் வாங்கிச் சென்றுள்ளார். இந்தக் குழந்தை விற்பனையில் இடைத்தரகர்களாக பபுல் போரா மற்றும் திலீப் சைகியா ஆகியோர் இருந்துள்ளனர்.

குழந்தை
சிவகங்கை: பிறந்த சில மணி நேரத்தில் உடலில் காயத்துடன் வீசப்பட்ட குழந்தை... யார் செய்தது இக்கொடூரத்தை?

சிலபத்தூரைச் சேர்ந்த மருத்துவர் சந்திரஜித் இதுகுறித்து கூறியதன்பேரில் இந்த விவரம் எங்களுக்குத் தெரிய வந்தது. அதன்பேரிலேயே நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். போலீஸார் இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தொடரும் போர் | ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் நியமனம்.. யார் இந்த ஷேக் நைம் காசிம்?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com