உச்சகட்ட பதட்டத்தில் காஷ்மீர் - துர்க்கையம்மன் யாத்திரையும் நிறுத்தம்

உச்சகட்ட பதட்டத்தில் காஷ்மீர் - துர்க்கையம்மன் யாத்திரையும் நிறுத்தம்

உச்சகட்ட பதட்டத்தில் காஷ்மீர் - துர்க்கையம்மன் யாத்திரையும் நிறுத்தம்
Published on

அமர்நாத் யாத்திரையை அடுத்து, காஷ்மீரில் மாதா யாத்திரை எனப்படும் துர்க்கையம்மன் யாத்திரையும் நிறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள்:-

அமர்நாத் யாத்திரையை அடுத்து, காஷ்மீரில் மாதா யாத்திரை எனப்படும் துர்க்கையம்மன் யாத்திரையும் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 25 முதல் செப்டம்பர் 5 வரை மாதா யாத்திரை நடைபெறும் நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது

காஷ்மீர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் வசிக்கும் மாணவர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுதிக்கு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களது தொண்டர்களை அமைதிக் காக்க வலியுறுத்துமாறு ஆளுநர் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியலமைப்பு சட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்வதாக தெரியவில்லை என்றும் எந்தவித பீதியையும் கிளப்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 25 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒமர் அப்துல்லா, அரசியல் சட்டப்பிரிவு 35ஏ, 370களில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மெஹபூபா முஃப்தி, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி மீண்டும் பதட்டத்தின் உச்சியில் உள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு எவ்வித தெளிவான விளக்கத்தையும் அளிக்கவில்லை. கட்சி ஆதரவாளர்களுடன் பட்காமில் ஆலோசனை நடத்தவுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com