\
இரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..!

இரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..!

இரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..!
Published on: 

இரண்டு ரூபாய்க்கான சண்டையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள வலசபாகலா கிராமத்தை சேர்ந்தவர் சுவர்ணராஜூ(24). இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று அங்குள்ள சைக்கிள் கடைக்கு சென்ற அவர் தனது சைக்கிள் டயருக்கு காற்று அடித்துள்ளார். 

இதற்கு சைக்கிள் கடைக்காரர் சம்பா, அவரிடம் இரண்டு ரூபாய் கேட்டுள்ளார். அந்த சமயத்தில் சுவர்ணராஜூவிடம் 2 ரூபாய் இல்லாததால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சுவர்ண ராஜூ, சம்பாவை தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த இடத்தில் இருந்த சம்பாவின் நண்பர் அப்பா ராவ், அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து சுவர்ணராஜூவின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவத்தை பார்த்தவர்கள் உடனடியாக சுவர்ணராஜூவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுவர்ணராஜூ உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சைக்கிள் கடை உரிமையாளர் சம்பாவை கைது செய்துள்ளனர். அத்துடன் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான அப்பா ராவை தேடி வருகின்றனர். 2 ரூபாய்க்காக ஏற்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com