100 கோடி மதிப்பிலான வியாபாரம்... படித்தக் கல்வி என அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் துறவியாக மாறியுள்ளார்.
குஜராத்தில் உள்ள ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மோஷேஷ். பட்டயக் கணக்காளருக்கு ((சார்டட் அக்கவுண்ட்) படித்தவர். ஏராளமான சொத்துகளுக்குச் சொந்தக்காரர். வீட்டில் பெற்றோர்கள் வியாபாரம்தான் செய்து வந்துள்ளனர். வியாபாரம் என்றால் லட்சக்கணக்கினால் ஆன வியாபாரம் அல்ல. கோடிகளில் புழங்கும் வியாபாரம். ஆனால் மோஷேஷ் மனதில் சொத்துகள் மீது ப்ரியம் ஏற்படவில்லை. ஆடம்பர வாழ்க்கையிலும் மனம் லயிக்கவில்லை.
எப்படியாவது துறவியாக ஆக வேண்டும் என நினைத்திருக்கிறார். அதன்படி சுமார் 100 கோடி மதிப்பிலான தனது அனைத்து சொத்துகளையும் உதறித் தள்ளிவிட்டு முழுமையான துறவியாக மாறியிருக்கிறார். துறவியாக மாறியதையடுத்து தனது வீட்டின் சொத்துகள் அனைத்தையும் இனி மோஷேஷ் அனுபவிக்க முடியாது. மேலும் குடும்பத்தை விட்டு பிரிந்து மற்ற துறவிகளுடன்தான் வாழ்க்கை இருக்கும். மோஷேஷ் துறவியாக மாறி குடும்பத்தை விட்டு பிரிந்த சூழல் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.