\
தேஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் 24 பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தேஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் 24 பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தேஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் 24 பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு
Published on

கோவாவில் இருந்து மும்பைக்கு சென்ற தேஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 24 பயணிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கோவாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு தேஜா எக்ஸ்பிரஸ் (வண்டி. எண். 22120) ரயில் புறப்பட்டது. இதில் பயணம் செய்த பயணிகள் ரயில்வே நிர்வாகம் சார்ப்பில் செயல்படும் கேண்டினில் விற்கப்படும் உணவை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் பயணிகள் சிலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் மகாராஷ்டிரா மாநிலம் சிப்லுன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணிகளை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 24 பயணிகள் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com