கேரளா இளைஞர் மரணம்
கேரளா இளைஞர் மரணம்web

கால்பந்து விளையாடியபோது மாரடைப்பு.. துபாய் சென்ற 23 வயது கேரளா இளைஞர் மரணம்!

துபாய்க்கு வேலை தேடிச்சென்ற கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கால்பந்துவிளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
Published on

துபாயில் சனிக்கிழமை இரவின்போது புல்வெளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த 23 வயது இளைஞர் சுருண்டுவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவர் இந்தியாவின் கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் என்றும், வேலைத்தேடி துபாய்க்கு சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

கேரளா இளைஞர் மரணம்
அடேங்கப்பா.. வருசத்துக்கு இத்தனை கோடியா? Cricket கமெண்ட்ரி செய்பவரின் ஒருநாள் சம்பளம் என்ன தெரியுமா?

விளையாடிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மாரடைப்பு..

கேரளா கோழிக்கோடு பகுதியில் முக்கம் அருகே உள்ள சேத்தூர் பொட்டம்மாள் பகுதியைச் சேர்ந்த நாசர் தோளேங்கல், இவரின் மகன் 23 வயது மகன் அசார் தோளேங்கல். இவர் சாத்தமங்கலத்தில் உள்ள எம்இஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக துபாய் சென்றுள்ளார்.

மாரடைப்பு
மாரடைப்பு

துபாய்க்கு சென்ற அசார் தோளேங்கல் கடந்த சனிக்கிழமை அன்று புல்வெளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த போதே திடீரென சுருண்டு விழுந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை உறுதிசெய்துள்ளனர். இறந்த அவரது உடலை கோழிக்கோடு எடுத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளா இளைஞர் மரணம்
கடைசி நாள்.. இறுதி 3 நிமிடம்.. வெற்றிக்கு 1விக். தேவை.. பேட்ஸ்மேனை சூழ்ந்த 11வீரர்கள்! த்ரில் போட்டி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com