ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை! காரணம் இதுதான்!

ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை! காரணம் இதுதான்!
ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை! காரணம் இதுதான்!

ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் இந்திய கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதள நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதள நிறுவனங்கள், பயனர்கள் அளித்த புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும்.

அதன்படி, பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் அறிக்கையாக வாட்ஸ்அப் நிறுவனம், மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் விதிகளை மீறிய, சட்டவிரோத கருத்துகளைப் பரிமாறிய 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதே போல கடந்த ஜீன் மாதத்தில் 22 லட்சம் கணக்குகளையும், ஜீலை மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமாக கணக்குளையும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com