ம.பி. | பாஜக எம்.பிக்கு தலைவலியாக மாறியுள்ள இன்ஸ்டா பிரபலம்!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான லீலா சாஹூ என்ற கர்ப்பிணி, பாஜக எம்.பிக்கு தலைவலியாக மாறியுள்ளார். பயணங்கள், கிராமப்புற கலாசாரம், கண்காட்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கை பற்றிய தகவல்களை வழங்கி லீலா சாஹூ இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் என அனைத்திலும் பிரபலமடைந்தார். கிராமப்புற விஷயங்களை வீடியோ மூலம் தெரிவித்து வந்த லீலா சாஹூ கடந்த ஆண்டு உள்ளூர் சமூகப் பிரச்னைகளையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். குறிப்பாக அந்த வீடியோக்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக தலைவர்களை கேள்விகேட்கத் தொடங்கினார்.
கர்ப்பமானதில் இருந்து, அவரும் அவரது குடும்பத்தினரும் சாலை வசதி கேட்டு பலமுறை உள்ளூர் தலைவர்களை சந்தித்தும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதனால் சாலை வசதி கேட்டு வீடியோ வெளியிடவே, அதைப் பார்த்த பாஜக எம்.பி ராஜேஷ் மிஸ்ரா, பெண்களின் பிரசவ தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த லீலா சாஹூ, பிரசவத்துக்கு பின் நான் நேரடியாக டெல்லி சென்று அமைச்சர் நிதின் கட்கரியிடம் குறைபாடுகளை கூறுவேன் என தெரிவித்துள்ளார்.