காஷ்மீர் கல்வீச்சு: படுகாயமடைந்த சென்னை இளைஞர் பலி

காஷ்மீர் கல்வீச்சு: படுகாயமடைந்த சென்னை இளைஞர் பலி

காஷ்மீர் கல்வீச்சு: படுகாயமடைந்த சென்னை இளைஞர் பலி
Published on

காஷ்மீரில் நடந்த கல்வீச்சீல் படுகாயமடைந்த சென்னை இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர் காஷ்மீரில் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். காஷ்மீரின் பர்காம் மாவட்டத்தில் நடந்த பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த கல்வீச்சில் திருமணி மற்றும் அவருடன் சென்ற 5 சுற்றுலா பயணிகளும் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் திருமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், கல்வீச்சில் படுகாயமடைந்த திருமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


திருமணியின் குடும்பத்தாருக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவம் தனது தொகுதியில் நிகழ்ந்துள்ளது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இது போன்ற வன்முறைச் சம்பவங்களை தான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்றும் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com