ப்ளூவேல் விளையாட்டிற்கு தமிழக இளைஞர் உயிரிழப்பு?

ப்ளூவேல் விளையாட்டிற்கு தமிழக இளைஞர் உயிரிழப்பு?
ப்ளூவேல் விளையாட்டிற்கு தமிழக இளைஞர் உயிரிழப்பு?

தமிழக இளைஞர் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டிற்கு பலியானதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியே சேர்ந்த 22 வயது இன்ஜினியர் ப்ளூவேல் விளையாட்டிற்கு பலியானதாக தெரிகிறது. சேஷாத்ரி என்ற அந்த இளைஞர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம்பார்த்து ஷேதாத்ரி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் சேஷாத்ரியின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, மொபைலில் சேஷாத்ரி அதிக நேரம் ப்ளூ வேல் விளையாட்டு விளையாடி உள்ளதாக தெரிகிறது. எனவே ப்ளூவேல் விளையாட்டின் சவாலை ஏற்றுதான் சேஷாத்ரி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் இதுதொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ப்ளூவேல் விளையாட்டிற்கு பல நாடுகளில் பலர் உயிரிழந்தனர். இதனால் ப்ளூவேல் விளையாட்டை யாரும் விளையாட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் ஒருசிலர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் லோக்சபாவில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு, ப்ளூவேல் விளையாட்டால் யாரும் உயிரிழந்ததற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com