இந்தியா
மத்தியப் பிரதேசம்: சிறைச்சாலை இடிந்து விபத்து; 22 கைதிகள் படுகாயம்
மத்தியப் பிரதேசம்: சிறைச்சாலை இடிந்து விபத்து; 22 கைதிகள் படுகாயம்
மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்ட சிறைச்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 22 கைதிகள் காயம் அடைந்தனர்.
பிந்த் மாவட்ட சிறைச்சாலையில் 255 கைதிகள் உள்ளநிலையில், அதிகாலை 5.10 மணி அளவில் சிறைச்சாலை சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. மிகவும் பழமையான அந்த சிறைச்சாலை கட்டடம், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவர் இடிந்த விபத்தில் 22 கைதிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் கவலைக்கிடமாக உள்ள ஒரு கைதி, குவாலியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சுவர் இடிந்த விபத்திலும் எந்த கைதியும் தப்பிச்செல்லவில்லை என்றும், காயம் அடைந்த கைதிகள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.