'உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 22 இந்தியாவில்!' - புதிய ஆய்வறிக்கையில் தகவல்

'உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 22 இந்தியாவில்!' - புதிய ஆய்வறிக்கையில் தகவல்
'உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 22 இந்தியாவில்!' - புதிய ஆய்வறிக்கையில் தகவல்

உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 20 நகரங்கள் உள்ளன என்றும், உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி திகழ்கிறது என்றும் ஒரு புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. சுவிஸ் அமைப்பான ஐ.க்யூ ஏர் (IQAir) இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. 'உலக காற்றின் தர அறிக்கை, 2020' என்கிற தலைப்பில் உலகளவில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், 2019 முதல் 2020 வரை டெல்லியின் காற்றின் தரம் ஏறக்குறைய 15 சதவிகிதம் மேம்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னேற்றம் இருந்தபோதிலும், மாசுபாட்டில் 10-வது இடத்தில் டெல்லி உள்ளது. உலகின் மாசுபட்ட தலைநகராகவும் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, "மிகவும் மாசுபட்ட நகரங்களின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் உள்ளன" என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

டெல்லியைத் தவிர, உலகின் மிக மாசுபட்ட 30 நகரங்களில் 21 இந்திய நகரங்களான காசியாபாத், புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ, மீரட், ஆக்ரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகர், ராஜஸ்தானில் பிவாரி, ஃபரிதாபாத், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ஹரியானாவில் ரோஹ்தக் மற்றும் தருஹேரா, பீகாரில் முசாபர்பூர் ஆகியவை அடக்கம்.

இந்த ஆய்வறிக்கையின்படி, அதிக மாசுபட்ட நகரம், சீனாவின் சின்ஜியாங். இதற்கு அடுத்த இடங்களில் ஒன்பது இந்திய நகரங்கள் உள்ளன. காசியாபாத் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாகும், அதைத் தொடர்ந்து புலந்த்ஷஹர், பிஸ்ராக் ஜலல்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ மற்றும் பிவாரி ஆகியவை உள்ளன. உலகளாவிய நகரங்களின் தரவரிசை அறிக்கை 106 நாடுகளின் PM2.5 தரவை அடிப்படையாகக் கொண்டது, இது தரை அடிப்படையிலான கண்காணிப்பு நிலையங்களால் அளவிடப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை அரசாங்க நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து, சமையல் புகை, மின்சார உற்பத்தி, தொழில், கட்டுமானம், கழிவுகளை எரித்தல் மற்றும் வேளாண் கழிவுகளை எரித்தல் முதலியவை இந்தியாவின் காற்று மாசுபாட்டின் முக்கியக் காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, போக்குவரத்து புகை முக்கிய பங்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 'கிரீன்ஸ்பீஸ் இந்தியா'வின் காலநிலை ஆர்வலர் அவினாஷ் சஞ்சல் கூறுகையில், ``டெல்லி உட்பட பல நகரங்களில் பொதுமுடக்கம் காரணமாக காற்றின் தரத்தில் ஓரளவு நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அரசுகள் நிலையானதும், தூய்மையானதுமான எரிசக்தி ஆதாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது. தூய்மையான எரிசக்தியும், தூய்மையான போக்குவரத்திற்கான மாற்றத்தை விரைவுபடுத்துவது உயிர்களைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார தொடர்பான செலவுகளை வியத்தகு முறையில் குறைக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com