இந்தியா
தமிழகத்தில் 22 கொரோனா ஹாட்ஸ்பாட்" மாவட்டங்கள் - மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 22 கொரோனா ஹாட்ஸ்பாட்" மாவட்டங்கள் - மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 22 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1000 த்தை கடந்துள்ளது. இதனிடையே முன்னதாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகியவற்றை "ஹாட்ஸ் பாட்" மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது